அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து 220 கி.மீ., சிதம்பரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
செங்கல்பட்டிலிருந்து 210 கி.மீ., சென்னையிலிருந்து 260 கி.மீ. திருச்சியிலிருந்து 188 கி.மீ.
மதுரையிலிருந்து 315 கி.மீ.
வரிசை எண் : 68
சிறப்பு : இறைவன் திருஞானசம்பந்தரை ஞானப்பால் கொடுத்து ஆட்கொண்ட தலம். அதனால் சம்பந்தர் உவமையிலாக்
கலைஞானமும், உணர்வரிய மெய்ஞானமும் பெற்றத் தலம். தோணியப்பர் மற்றும் சட்டைநாதர் சந்நிதிகள்.
தோணியப்பர் சந்நிதியிலிருந்து பார்த்தால் திருக்குளம் தெரியும். குளக்கரையில் நின்று அழுது கொண்டிருந்த
சம்பந்தருக்குக் காட்சி கொடுத்த இறைவன் இவரே. இச் சந்நிதிக்கு மேலே சட்டைநாதர் உள்ளார்.
இறைவன்: பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்
இறைவி : பெரியநாயகி, திருநிலைநாயகி
தலமரம்: பாரிசாதம்
தீர்த்தம் : பிரமதீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழி & அஞ்சல் – 609 110
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 04364-270235
இருப்பிட வரைபடம் |