அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 268 கி.மீ. நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர்
சாலையில் 4 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 265 கி.மீ., சென்னையிலிருந்து 311 கி.மீ. திருச்சியிலிருந்து 144 கி.மீ. மதுரையிலிருந்து
277 கி.மீ.
வரிசை எண் : 200
சிறப்பு : வசிட்டர் காமதேனுவின் வெண்ணையினால் சிவலிங்கம் அமைத்துப் பின் பூசை முடிவில் அதனை எடுக்க முயன்றபோது சிக்கிக்
கொண்டமையால் இத்தலம் சிக்கல் எனப்பெயர் பெற்றது. மாடக்கோயில். இது ஒரு முருகர் தலமும் கூட. சிங்காரவேலர் சந்நிதி சிறப்பு
வாய்ந்தது. கோயிலுக்கு அருகில் விருத்தகாவேரி ஓடுகிறது. சுவாமி கட்டுமலை மீது உள்ளார். சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று.
இறைவன்: நவநீதேஸ்வரர், வெண்ணைநாதர்
இறைவி : சத்தியதாட்சி, வேல்நெடுங்கண்ணி
தலமரம்: குடமல்லிகை
தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரணி
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. நவநீதேஸ்வரர் திருக்கோயில்,
சிக்கல் & அஞ்சல் – 611 108
(வழி) நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 05.00 – 12.30 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 04365-245350
இருப்பிட வரைபடம் |