அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து 234 கி.மீ., சீர்காழி – பூம்புகார் சாலையில் 14 கி.மீ.
சென்றால் சாலையோரத்தில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 224 கி.மீ., சென்னையிலிருந்து 274 கி.மீ.
திருச்சியிலிருந்து 202 கி.மீ. மதுரையிலிருந்து 329 கி.மீ.
வரிசை எண் : 63
சிறப்பு : கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். சாய் என்றால் கோரைப்புல். கோரை மிகுந்திருந்த இடமாக
விளங்கியதால் சாய்க்காடு என்றானது. இயற்பகைநாயனார் இந்தத் தலம் வரை வந்து தன் மனைவியை
இறைவனுடன் அனுப்பி வைத்தார். அவருடைய முத்தித் தலமும் இதுவே. வில்லேந்திய வேலவராக
முருகனை (பஞ்சலோகத் திருமேனி, கடலில் கிடைத்தது) இந்தத் தலத்தில் மட்டும் பார்க்கலாம்.
இறைவன்: சாயாவானேஸ்வரர்
இறைவி : கோஷாம்பாள், குயிலினும் நன்மொழியம்மை
தலமரம்: பைஞ்சாய்
தீர்த்தம் : காவிரி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. சாயாவானேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், காவிரிப்பூம்பட்டினம் அஞ்சல் – 609 105
சீர்காழி வட்டம், மயிலாடுதுறை R.M.S நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 9443107069, 04364-260151
இருப்பிட வரைபடம் |