banner
சோழநாடு - சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை)

அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து 310 கி.மீ., தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 15 ஆவது கி.மீ. ல் உள்ளது இத் தலம். திருவையாறு-கும்பகோணம் பேருந்து இக்கோயில் வழியாகச் செல்கிறது. செங்கல்பட்டிலிருந்து 330 கி.மீ., சென்னையிலிருந்து 380 கி.மீ. திருச்சியிலிருந்து 73 கி.மீ. மதுரையிலிருந்து 203 கி.மீ.
வரிசை எண் : 134
சிறப்பு : திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். சக்கரவாளப் பறவை வழிபட்ட தலம்.
இறைவன்: சக்கரவாகேஸ்வரர்
இறைவி : தேவநாயகி
தலமரம்: -
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், ஐயம்பேட்டை அஞ்சல் – 614 201, தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 10.00 ; மாலை 05.30 – 07.00
தொடர்புக்கு : 04374-292971, 9345439743

இருப்பிட வரைபடம்


படையினார் வெண்மழுப் பாய்புலித்தோல் அரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே 
				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 படையினார் வெண்மழுப்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க