அமைவிடம்: சென்ற கோயிலோடு காவிரி வடகரைத் தலங்கள் நிறைவு பெறுகின்றன.
இந்தக் கோயிலிலிருந்து காவிரி தென்கரைத் தலங்கள் ஆரம்பமாகின்றன.
காஞ்சிபுரத்திலிருந்து 345 கி.மீ., திருச்சியிலிருந்து நாமக்கல், சேலம் சாலையில் 35 கி.மீ. தொலைவில்
முசிறிக்கு முன்பாக உள்ளது குளித்தலை. அங்கிருந்து புறப்பட்டு 1 கி.மீ. தூரம் வந்தவுடன் ஒரு
நாற்சந்தி வரும். அதில் இடப்புறம் மணப்பாறை செல்லும் சாலையில் 9 கி.மீ. வரவேண்டும்.
செங்கல்பட்டிலிருந்து 297 கி.மீ., சென்னையிலிருந்து 352 கி.மீ. மதுரையிலிருந்து 148 கி.மீ.
வரிசை எண் : 118
சிறப்பு : மிகவும் உயரமான மலை. 1140 படிகள் உள்ளன. ஏறுவதற்குச் சற்று சிரமம்.
குரங்குத் தொல்லைகளும் உண்டு. மலை ஏறுபவர்கள் கையில் கொம்புடன் செல்வதைக் காணலாம்.
தட்சிணாமூர்த்தி அழகு தனி அழகு.
இறைவன்: இரத்தினகிரீஸ்வரர், மாணிக்கஈசர்
இறைவி : சுரும்பார்குழலி
தலமரம்: -
தீர்த்தம் : -
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், வாட்போக்கி (ஐயர்மலை)
சிவாயம் அஞ்சல் – 639 124, (வழி) வைகநல்லூர் திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 10.00 முதல் மாலை 04.30 – 06.00
தொடர்புக்கு : 04323-245522, 04323-245359
இருப்பிட வரைபடம் |