அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 260 கி.மீ. மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில்
சன்னாநல்லூர் வந்து சாலையோரத்தில் உள்ள வளைவில் திரும்பி 11 கி.மீ. சென்றால் கோயில். திருப்புகலூரிலிருந்து 1 கி.மீ.
செங்கல்பட்டிலிருந்து 258 கி.மீ., சென்னையிலிருந்து 303 கி.மீ. திருச்சியிலிருந்து 147 கி.மீ. மதுரையிலிருந்து 291 கி.மீ.
வரிசை எண் : 194
சிறப்பு : இராவணனைக் கொன்ற பாவம் நீங்க இராமர் வழிபட்ட தலம். இராமர் வந்தபோது நந்தி தடுத்ததாகவும் பின் அம்பாள்
ஆணைப்படி வழிவிட்டதாகவும் வரலாறு. அதனால் இராம-நந்தீச்சரம் என்பது இராமனதீச்சரம் என்றானது. மூலவர் பெரிய உருவம்.
இறைவன்: இராமனதீஸ்வரர்
இறைவி : சூளிகாம்பாள், சரிவார்குழலி
தலமரம்: சண்பகம்
தீர்த்தம் : இராம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. இராமனதீஸ்வரர் திருக்கோயில்,
திருக்கண்ணபுரம் & அஞ்சல் – 609 704
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 08.30 – 11.00 ; மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 04366-292300
இருப்பிட வரைபடம் |