banner
திருப்பல்லவனீச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்)

அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து 235 கி.மீ., சாய்க்காட்டிலிருந்து 1 கி.மீ. சாலையோரத்தில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 225 கி.மீ., சென்னையிலிருந்து 275 கி.மீ. திருச்சியிலிருந்து 203 கி.மீ. மதுரையிலிருந்து 330 கி.மீ.
வரிசை எண் : 64
சிறப்பு : பட்டினத்தார், இயற்பகைநாயனார் அவதாரத்தலம் சிலப்பதிகாரம் தொடங்கிய தலம். பல்லவ மன்னன் வழிபாடு செய்த பதி.
இறைவன்: பல்லவனேஸ்வரர்
இறைவி : சௌந்தர நாயகி
தலமரம்: மல்லிகை
தீர்த்தம் : காவிரி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பல்லவனேஸ்வரர் திருக்கோயில், (பல்லவனீச்சுரம்) காவிரிப்பூம்பட்டினம் பூம்புகார் அஞ்சல் – 609 105 சீர்காழி வட்டம், மயிலாடுதுறை R.M.S நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 04364-260594

இருப்பிட வரைபடம்


எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
மண்ணார் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே
 			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 எண்ணார் எயில்கள்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க