banner
சோழநாடு - பெருவேளூர் (மணக்கால் ஐயம்பேட்டை)

அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 262 கி.மீ. கும்பகோணம்-குடவாசல் சாலையில் மணக்கால் என்னும் ஊரில் உள்ள தலம். செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ., சென்னையிலிருந்து 305 கி.மீ. திருச்சியிலிருந்து 125 கி.மீ. மதுரையிலிருந்து 267 கி.மீ.
வரிசை எண் : 209
சிறப்பு : முருகன் வழிபட்ட தலம். வாயுவுக்கும் ஆதிஷேசனுக்கும் நடந்த போட்டியில் வந்து விழுந்த சிகரங்களுள் இதுவும் ஒன்று. மோகினி வடிவம் எடுத்த பெருமாள் அவதார நோக்கம் நிறைவேறிய பின்பு தன் ஆண் வடிவம் மீண்டும் பெற இங்கு வந்து இவ் இறைவரை வழிபட்டதாக வரலாறு. மாடக்கோயில்.
இறைவன்: அபிமுக்தீஸ்வரர், பிரியாஈஸ்வரர்
இறைவி : அபின்னாம்பிகை, ஏலவார்குழலி
தலமரம்: வன்னி
தீர்த்தம் : சவரணப் பொய்கை தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால் அய்யம்பேட்டை & அஞ்சல் – 610 104 (வழி) திருவாரூர், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 11.00 ; மாலை 05.30 – 08.00
தொடர்புக்கு : 04366-325425

இருப்பிட வரைபடம்


விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து
எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கு எற்றதாகும்
பரிவினாற் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை
மருவிநான் வாழ்த்தி உய்யும் வகையது நினைக்கின்றேனே 
           - அப்பர்
பாடல் கேளுங்கள்
 விரிவிலா அறிவினார்கள்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க