அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து 241 கி.மீ., கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி
செல்லும் சாலையில் சென்றால் இத் தலம். சத்திமுற்றத்திற்கு அருகில். செங்கல்பட்டிலிருந்து 261 கி.மீ., சென்னையிலிருந்து
311 கி.மீ. திருச்சியிலிருந்து 80 கி.மீ. மதுரையிலிருந்து 210 கி.மீ.
வரிசை எண் : 140
சிறப்பு : ஊர் பெயர் பழையாறை. திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப் பந்தர் அருளிய தலம். காமதேனுவின்
மகள் பட்டி பூசை செய்த தலம். இத் தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சற்று விலகியே உள்ளன. சம்பந்தர்
வரும்போது அக்காட்சியைக் காண இறைவன் நந்திகளை விலகியிருக்கச் சொன்னதாக வரலாறு. விசுவாமித்திரர் பிரமரிஷி
பட்டம் பெற்றது இத் தலத்தில்தான்.
இறைவன்:பட்டீஸ்வரர், தேனுபுரீஸ்வரர்
இறைவி : ஞானாம்பிகை, பல்வளைநாயகி
தலமரம்: வன்னி
தீர்த்தம் : ஞான தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பட்டீஸ்வரர் திருக்கோயில்,
பட்டீஸ்வரம் அஞ்சல் – 612 703
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 0435-2416976 இருப்பிட வரைபடம் |