banner
சோழநாடு - திருப்புள்ளமங்கை (பசுபதிகோயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 311 கி.மீ., தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 16 ஆவது கி.மீ. ல் ஐயம்பேட்டையைத் தாண்டி கண்டியூர் பாதையில் உள்ளது இத் தலம். திருவையாறு-கும்பகோணம் பேருந்து இக்கோயில் வழியாகச் செல்கிறது. செங்கல்பட்டிலிருந்து 331 கி.மீ.,
சென்னையிலிருந்து 381 கி.மீ. திருச்சியிலிருந்து 74 கி.மீ. மதுரையிலிருந்து 204 கி.மீ. வரிசை எண் : 133
சிறப்பு : குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ளது. அமுதத்தை இறைவன் உண்ட தலம். நவகிரகங்களுக்கு மத்தியில் நந்தி உள்ளார்.
இறைவன் : பிரமபுரீஸ்வரர், பசுபதீஸ்வரர், ஆலந்துறைநாதர்
இறைவி : அல்லியங்கோதை, சௌந்தரநாயகி
தலமரம் : -
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில் அஞ்சல் – 614 206, தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.30 ; மாலை 04.00 – 06.00
தொடர்புக்கு : 04374-241457, 9443362563, 9367768244

இருப்பிட வரைபடம்


பொந்தினிடைத் தேன் ஊறிய பொழில்சூழ் புளமங்கை
அந்தண் புனல்வரு காவிரி ஆலந்துறையானைக்
கந்தம் மலிகமழ் காழியுள் கலைஞான சம்பந்தன்
சந்தம் மலி பாடல்சொலி ஆடத் தவம் ஆமே 
					- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
பொந்தினிடைத் தேன்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க