banner
சோழநாடு - பரிதிநியமம் (பருத்தியப்பர் கோயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 290 கி.மீ. தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் உழுவூர் சென்று அங்கிருந்து 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 272 கி.மீ., சென்னையிலிருந்து 322 கி.மீ. திருச்சியிலிருந்து 112 கி.மீ. மதுரையிலிருந்து 242 கி.மீ.
வரிசை எண் : 218
சிறப்பு : பரிதி என்றால் சூரியன். சூரியன் வழிபட்ட தலம்.
இறைவன் : பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர்
இறைவி : மங்களாம்பிகை, மங்களநாயகி
தலமரம் : அரச மரம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பரிதியப்பர் திருக்கோயில், பருத்தியப்பர் கோயில், மேலவுளூர் அஞ்சல் – 614904 தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.30 ; மாலை 03.00 – 08.30
தொடர்புக்கு : 04372-256910

இருப்பிட வரைபடம்


விண்கொண்ட தூமதி சூடி நீடுவிரி புன்சடைதாழப்
பெண்கொண்ட மார்பில் வெண்ணீறு பூசிப் பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொடேர் கவர்ந்த கள்வர்க்கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதின்நியம்மே 
           - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
விண்கொண்ட தூமதி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க