banner
சோழநாடு - நாலூர் மயானம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 246 கி.மீ. திருச்சேறையிலிருந்து 4 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 276 கி.மீ., சென்னையிலிருந்து 288 கி.மீ. திருச்சியிலிருந்து 102 கி.மீ. மதுரையிலிருந்து 235 கி.மீ.
வரிசை எண் : 213
சிறப்பு : மாடக்கோயில். சோழகாலத்தில் சதுர்வேதிமங்கலம் என்று இருந்த ஊர் பின்பு நால்வேதியூர் என்றாகி (சதுர் என்றால் நான்கு) தற்போது நாலூர் என்றாகிவிட்டது. நாலூர் வைப்புத்தலமாக உள்ளது. நாலூர் மயானம் பாடல் பெற்ற தலம். மொத்தம் நான்கு மயானங்கள் உள்ளன. 1. கச்சி மயானம் (காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுள் உள்ளது), 2. கடவூர் மயானம் (திருக்கடையூருக்கு அருகில் உள்ளது), 3. காழி மயானம் (சீர்காழியுள் உள்ளது), 4. நாலூர் மயானம்
இறைவன் : ஞானபரமேஸ்வரர்
இறைவி : ஞானம்பிகை
தலமரம் :
தீர்த்தம் : ஞான தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், நாலூர்மயானம், திருச்சேறை அஞ்சல் – 612 605 குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 09.00 ; மாலை ? – ?
தொடர்புக்கு : 9443959839

இருப்பிட வரைபடம்


கோலத்தார் கொன்றையான் கொல்புலித் தோலாடையான்
நீலத்தார் கண்ட்த்தான் நெற்றியோர் கண்ணான்
ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார்பால் சூழாவாம் தொல்வினையே 
           - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
கோலத்தார் கொன்றையான்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க