banner
சோழநாடு - குடந்தைக் காரோணம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து அணைக்கரை வழியாக 235 கி.மீ., சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 275 கி.மீ. சென்றால் இத் தலம். கும்பகோணம் பொற்றாமரைக்குளத்தின் கீழ்க் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து 80 கி.மீ. மதுரையிலிருந்து 210 கி.மீ.
வரிசை எண் : 145
சிறப்பு : அமுத கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலம். வியாழனும் சந்திரனும் வழிபட்ட தலம்.
இறைவன் :சோமேசர், சோமநாதர்
இறைவி : சோமசுந்தரி, தேனார்மொழியாள்
தலமரம் :
தீர்த்தம் : சோம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சோமேசர் திருக்கோயில், கும்பகோணம் & அஞ்சல் – 612 001 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு: 0435-2430349

இருப்பிட வரைபடம்


மூப்பூர் நலிய நெதியார் விதியாய் முன்னே அனல்வாளி
கோப்பார் பார்த்தனிலை கண்டருளும் குழகர் குடமூக்கில்
தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக்
காப்பார் காலனடையா வண்ணம் காரோணத்தாரே
பாடல் கேளுங்கள்
மூப்பூர் நலிய


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க