அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து அணைக்கரை வழியாக 235 கி.மீ., சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 275 கி.மீ.
சென்றால் இத் தலம். செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து 80 கி.மீ.
மதுரையிலிருந்து 210 கி.மீ.
வரிசை எண் : 143
சிறப்பு : மகாமகம் உற்சவம் நடக்கும் தலம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விழா இங்கு நடக்கிறது. இறைவன்
தந்த அமுத கலசம் தங்கிய தலம் ஆதலின் கும்பகோணம் என்றானது. மகாமக விழாவில் 9 புண்ணிய நதிகளும்
( கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) இங்கு வந்து நீராடுவதாக
வரலாறு. மூர்க்க நாயனார் தொண்டு செய்த தலம்.
இறைவன் :கும்பேஸ்வரர், அமுதேஸ்வரர்
இறைவி : மங்களாம்பிகை
தலமரம் : வன்னி
தீர்த்தம் : மகாமக குளம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கும்பேஸ்வரர் திருக்கோயில்,
கும்பகோணம் & அஞ்சல் – 612 001
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2420276
இருப்பிட வரைபடம்
|