அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 287 கி.மீ. மன்னார்குடியிலிருந்து 16 கி.மீ.
செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 279 கி.மீ., சென்னையிலிருந்து 330 கி.மீ. திருச்சியிலிருந்து 109 கி.மீ.
மதுரையிலிருந்து 238 கி.மீ.
வரிசை எண் : 228
சிறப்பு : அரம்பையும் ஐராவதமும் வழிபட்ட தலம். கோட்டூர் இரண்டு ஊர்களாக உள்ளது. கீழ்க்கோட்டூரில் உள்ள
சிவாலயம் திருவிசைப்பா பாடல் பெற்றது. அதனை கோட்டூர் மணியம்பலம் என்பர். மேலக்கோட்டூரில் உள்ளதுதான்
தேவாரப்பாடல் பெற்றது.இங்கு மூல மூர்த்தியே பிரதோஷ மூர்த்தி. இக்கோயிலின் கற்றூண்கள் அமைப்பு அழகு.
இறைவன் : கொழுந்தீஸ்வரர், சமீவனேஸ்வரர்
இறைவி : மதுரபாஷிணி, தேனாம்பாள்
தலமரம் : வன்னி
தீர்த்தம் : அமுத கூபம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்,
கோட்டூர் & அஞ்சல் – 614 708
(வழி) மன்னார்குடி,
மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 10.00 ; மாலை 05.00 – 06.00
தொடர்புக்கு : 04367-279791
இருப்பிட வரைபடம்
|