அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 236 கி.மீ., கும்பகோணத்திலிருந்து திருவையாறு சாலையில் 4 கி.மீ. சென்றால் கோயில்.
கும்பகோணம் –சுவாமிமலை பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்தில் கோயில்.
செங்கல்பட்டிலிருந்து 230 கி.மீ., சென்னையிலிருந்து 280 கி.மீ. திருச்சியிலிருந்து 91 கி.மீ. மதுரையிலிருந்து 222 கி.மீ.
வரிசை எண் : 98
சிறப்பு : ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் இலிங்கம் வெளிப்பட்டதால் கொட்டையூர் என்றாயிற்று. சோழ மன்னனுக்கு
கோடிலிங்கமாகக் காட்சி அளித்த்தால் இறைவன் கோடிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். மார்க்கண்டேயர்
வழிபட்ட தலம். இங்கு செய்யும் புண்ணியமும் பாவமும் பல கோடி மடங்காகப் பெருகும் என்பர். இங்கு
பாவம் செய்தால் அதற்கு விமோசனமே இல்லை என்பதற்கு அடையாளமாக கொட்டையூரில் செய்த
பாவம் கட்டையோடே என்ற பழமொழியும் இங்கு உண்டு.
இறைவன் : கோடிஸ்வரர்
இறைவி : கந்துக்கிரீடாம்பாள், பந்தாடுநாயகி
தலமரம் : ஆமணக்குச் செடி
தீர்த்தம் : அமுத தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. கோடிஸ்வரர் திருக்கோயில், கொட்டையூர்,
மேலக்காவேரி அஞ்சல் – 612 002 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2454421
இருப்பிட வரைபடம்
|