banner
சோழநாடு - கோட்டாறு (கொட்டாரம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 260 கி.மீ. திருநள்ளாற்றில் இருந்து கும்பகோணம் – காரைக்கால் சாலையில் 3 கி.மீ. சென்று கொட்டாரம் கூட் ரோடு என்னும் இடம் வந்து அங்கிருந்து 1 கி.மீ. நடந்து செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 290 கி.மீ., சென்னையிலிருந்து 330 கி.மீ. திருச்சியிலிருந்து 120 கி.மீ. மதுரையிலிருந்து 250 கி.மீ.
வரிசை எண் : 170
சிறப்பு : ஐராவதம் (வெள்ளை யானை) வழிபட்டத் தலம். மூலத்தானத்தில் தேன் கூடு ஒன்று உள்ளது. சுபர் தேனி வடிவம் கொண்டு உள்ளே சென்று இறைவனை வழிபட்டதாக வரலாறு. ஆண்டுக்கொரு முறை அதில் தேன் எடுத்து இறைவனுக்கு அபிடேகம் செய்கின்றனர்.
இறைவன் : ஐராதீஸ்வரர்
இறைவி : சுகுந்தகுந்தளாம்பிகை, வண்டமர்குழலி
தலமரம் : பாரிஜாதம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஐராதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் & அஞ்சல் – 609 703 தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 11.30 ; மாலை 06.00 – 08.30
தொடர்புக்கு : 04368-261447

இருப்பிட வரைபடம்


வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை
ஓதிய ஒண்பொருளாகி நின்றான் ஒளியார்கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்தழகார் திருக்கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்தேத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே 
பாடல் கேளுங்கள்
 வேதியன் விண்ணவர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க