அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. குடவாசல்-கொரடாச்சேரி சாலையில்
5 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ. திருச்சியிலிருந்து 117 கி.மீ.
மதுரையிலிருந்து 256 கி.மீ.
வரிசை எண் : 230
சிறப்பு : இத்தலத்தில் முள்ளியாறு (ஓடம்போக்கி ஆறு) ஓடுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது ஆற்றில்
வெள்ளம் அதிகமாகப் போக அக்கரைக்குச் செல்ல படகு வலிப்பவர்கள் எவரும் இல்லாததால் சம்பந்தர் ஓடத்தில் அமர்ந்து பதிகம்
பாட படகு தானே சென்றது. இந்நிகழ்வினை ஓடத் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி அமவாசைக்கு மறுநாள் இங்கே
கொண்டாடுகிறார்கள். இத்தலத்திற்கு கூவிளம் (வில்வம்) தலமரம். எனவே இதனைக் கூவிளம்புதூர் என்று அழைத்தனர்.
பிற்காலத்தில் அது கொள்ளம்புதூர் ஆனது. கோயிலின் உள்ளே வலப்பக்கத் தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச்செல்லும் சிற்பம்
காணலாம். இத் தலத்திற்கு அடியேன் அடியார்பெருமக்களோடு பேருந்தில் வந்தபோது இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிட்டது.
மின் தடை காரணமாக வழியில் வெளிச்சம் இல்லை. கோயில் இருக்கும் இடம் வந்தும் கோயில் செல்லும் பாதை தெரியவில்லை.
அப்போது மாடு ஒன்று எங்கள் பேருந்துக்கு முன்னர் சென்றது. ஓட்டுநர் பல முறை ஒலி எழுப்பியும் அது பாதையை விட்டு
விலகாமல் பாதையின் மத்தியிலேயே சென்றது. அதன் பின்னாலேயே செல்லுங்கள் என்று ஓட்டுநருக்கு அடியேன் சொன்னேன்.
அந்த மாடு கோயிலின் வாசல் வரை வந்து நின்றது. என்னே பெருமானின் கருணை!
இறைவன் : வில்வாரண்யேஸ்வரர், வில்வநாதர்
இறைவி : சௌந்தரநாயகி, அழகுநாச்சியார்
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்,
திருக்களம்பூர் – 622 414
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 11.30 ; மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 9442185480
இருப்பிட வரைபடம்
|