banner
சோழநாடு - கீழ்வேளூர் (கீவளூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 275 கி.மீ. சிக்கலிலிருந்து 7 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 272 கி.மீ., சென்னையிலிருந்து 318 கி.மீ. திருச்சியிலிருந்து 151 கி.மீ. மதுரையிலிருந்து 284 கி.மீ.
வரிசை எண் : 201
சிறப்பு : அகத்தியர், வசிட்டர், மார்கண்டேயர் வழிபட்ட தலம். மாடக்கோயில்.
இறைவன் : கேடிலியப்பர், அட்சயலிங்கேஸ்வரர்
இறைவி : சுந்தரகுஜாம்பாள், வனமுலைநாயகி
தலமரம் : இலந்தை
தீர்த்தம் : சரவண தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. கேடிலியப்பர் திருக்கோயில், கீவளூர் & அஞ்சல் – 611 104 (வழி) நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.30 ; மாலை 04.30 – 09.00
தொடர்புக்கு : 04366-276733, 9994440478, 9894102731

இருப்பிட வரைபடம்


ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை
ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க
தாளானைத் தனொப்பார் இல்லாதானைச்
சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்து ஒப்பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையிலார்த்த
கீளானை கீழ்வேளூர் ஆளும்கோவைக்
கேடிலியை நாடும் அவர்கேடு இலாரே- அப்பர்
பாடல் கேளுங்கள்
 ஆளான அடியவர்கட்கு


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க