banner
சோழநாடு - கற்குடி (உய்யக்கொண்டான் மலை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 305 கி.மீ., திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். செங்கல்பட்டிலிருந்து 285 கி.மீ., சென்னையிலிருந்து 335 கி.மீ. மதுரையிலிருந்து 155 கி.மீ.
வரிசை எண் : 121
சிறப்பு : நந்திவர்ம பல்லவ மன்ன்னால் அமைக்கப்பட்ட கோயில். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். கோயில் சிறிய மலை மீது உள்ளது. கொடி மரத்திற்கு முன்பு இறைவனின் பாதம் உள்ளது. மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதற்காக இறைவன் கருவறையை விட்டு எழுந்து வந்த இடம்.
இறைவன் : உஜ்ஜீவநாதஸ்வாமி, உச்சிநாதர், கற்பகநாதர்
இறைவி : அஞ்சனாட்சி, பாலாம்பிகை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : ஞானவாவி, குடமுருட்டி
பாடல் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. உஜ்ஜீவநாதஸ்வாமி திருக்கோயில், (வழி) சோமரசம் பேட்டை உய்யக்கொண்டான் திருமலை & அஞ்சல் – 620 102, திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 12.00 ; மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 9442628044

இருப்பிட வரைபடம்


மறையோர் வானவரும் தொழுதேத்தி வணங்க நின்ற
இறைவா எம்பெருமான் எனக்கு இன்னமுது ஆயவனே
கறையார் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சல் என்னே
					- சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 மறையோர் வானவரும்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க