banner
சோழநாடு - கரவீரம் (கரையபுரம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 274 கி.மீ. திருவாரூர்-கும்பகோணம் சாலையில் வடகண்டம் என்னும் ஊரிலிருந்து 6கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 272 கி.மீ., சென்னையிலிருந்து 317 கி.மீ. திருச்சியிலிருந்து 137 கி.மீ. மதுரையிலிருந்து 279 கி.மீ.
வரிசை எண் : 208
சிறப்பு : கரவீரம் என்றால் பொன் அலரி. பொன் அலரியைத் தலமரமாகக் கொண்டதால் கரவீரம் எனப் பெயர் பெற்றது. கௌதமர் பூசித்தது.
இறைவன் : கரவீரேஸ்வரர்
இறைவி : பிரத்யட்சமின்னம்மை
தலமரம் : அலரி
தீர்த்தம் : அனவரத தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கரவீரேஸ்வரர் திருக்கோயில், கரையபுரம், மணக்கால் அய்யம்பேட்டை அஞ்சல் – 610 104 திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 11.00 ; மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 9865604488, 04366-241978

இருப்பிட வரைபடம்


தங்குமோ வினை தாழ்சடை மேலவன்
திங்களோடுடன் சூடிய
கங்கையான் திகழும் கரவீரத்தெம்
சங்கரன் கழல் சாரவே- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 தங்குமோ வினை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க