banner
சோழநாடு - கன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 7 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ.
வரிசை எண் : 237
சிறப்பு : சைவப்பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியாகி அவனும் அவன் வீட்டாரும் காணாதவாறு சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள். அச்சிவலிங்கத்தை ஒரு நாள் அவள் கணவன் கிணற்றில் எறிந்துவிட அப்பெண் கன்று கட்டும் முளையையே (ஆப்பு) சிவபெருமானாகக் கருதி வழிபட ஒருநாள் அதையும் அவன் கோடரியால் வெட்ட முற்படும்போது அதிலிருந்து இறைவன் வெளிப்பட்டு அவர்களுக்கு அருள் புரிந்தான் என்பது வரலாறு. எனவே இத்தலம் கன்று ஆப்பு ஊர் = கன்றாப்பூர் என்றானது. சுவாமி மீது வெட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காணலாம்.
இறைவன் : வஸ்த்ததம்பபுரீஸ்வரர், நடுதறியப்பர், நடுதறிநாதர்
இறைவி : ஸ்ரீவல்லிநாயகி, மாதுமையம்மை
தலமரம் : கல்பனை
தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர் & அஞ்சல் – 610 207, (வழி) வலிவலம் திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 11.00 ; மாலை 04.30 – 07.30
தொடர்புக்கு : 04366-204144, 9443195111

இருப்பிட வரைபடம்


எவரேனும் தாமாக இலாடத்திட்ட
திருநீறு சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவர் அவரைக் கண்டபோது
உகந்து அடிமைத்திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி
இரண்டு ஆட்டாது ஒழிந்து தன் திறமேபேணி
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
           - அப்பர்
பாடல் கேளுங்கள்
 எவரேனும் தாமாக


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க