அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில்
17 கி.மீ. செல்லவேண்டும். வலிவலத்திலிருந்து 4 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ.
வரிசை எண் : 239
சிறப்பு : திருணபிந்து முனிவர் வழிபட்ட தலம். இந்திரன் மணலால் சிவலிங்கம் பிடித்து வைக்கும்போது அவன் கை
அடையாளம் அதில் சின்னமாகப் படிய கைச்சின்னம் என்ற பெயர் பெற்றது இத்தலம். பின்பு கச்சனம் என்றானது. இது
ஒரு மாடக்கோயில்.
இறைவன் : கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர்
இறைவி : சுவேதவளைநாயகி, வெள்வளைநாயகி
தலமரம் : கோங்கு இலவு
தீர்த்தம் : வச்சிர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு கைச்சினேஸ்வரர் திருக்கோயில்,
கச்சனம் & அஞ்சல் – 610 201
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04366-247277
இருப்பிட வரைபடம்
|