அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 323 கி.மீ. இடும்பாவனத்திலிருந்து 3 கி.மீ.
செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 279 கி.மீ., சென்னையிலிருந்து 366 கி.மீ. திருச்சியிலிருந்து 120 கி.மீ.
மதுரையிலிருந்து 218 கி.மீ.
வரிசை எண் : 226
சிறப்பு : விநாயகர் வழிபட்டு இறைவனிடம் மாங்கனி பெற்ற தலம். இவ்வூருக்கு அருகில் துளசியாம்பட்டினம் என்ற
ஊர் உள்ளது. இங்கு ஒளவையாருக்கு ஒரு கோயில் உள்ளது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனின் தந்தை துளசா
என்னும் மன்னனால் கட்டப்பட்டது இது. ஒளவையை முருகன் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று
கேட்ட தலம் இது என்பர்.
இறைவன் : கற்பகநாதர், கற்பகேஸ்வரர்
இறைவி : சௌந்தரநாயகி, பாலசௌந்தரி
தலமரம் : பலா
தீர்த்தம் : விநாயக தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கற்பகநாத சுவாமி திருக்கோயில்,
கற்பகநாதர்குளம் & அஞ்சல் – 614 703
திருத்துறைப்பூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04369-240187, 9788048653
இருப்பிட வரைபடம்
|