banner
சோழநாடு - கடம்பந்துறை (கடம்பர் கோயில், குளித்தலை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 335 கி.மீ., திருச்சியிலிருந்து நாமக்கல், சேலம் சாலையில் 35 கி.மீ. தொலைவில் முசிறிக்கு முன்பாக உள்ளது குளித்தலை. செங்கல்பட்டிலிருந்து 277 கி.மீ., சென்னையிலிருந்து 327 கி.மீ. மதுரையிலிருந்து 175 கி.மீ.
வரிசை எண் : 119
சிறப்பு : கன்வ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி அளித்த தலம். காலையில் தரிசிக்க வேண்டிய தலம். சப்த கன்னியர்களின் சாபம் தீர்ந்த தலம்.
இறைவன் : கடம்பவனேஸ்வரர், கடம்பவனநாதர்
இறைவி : பாலகுஜாம்பாள், முற்றிலாமுலையாள்
தலமரம் : கடம்பு
தீர்த்தம் : காவிரி
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை & அஞ்சல் – 639 104, கரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 01.00 ; மாலை 04.30 – 09.00
தொடர்புக்கு : 04323-225228

இருப்பிட வரைபடம்


பூமென் கோதையுமை ஒருபாகனை
ஓமம்செய்தும் உணர்மின்கள் உள்ளத்தால்
காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமமேத்த நம் தீவினை நாசமே
			- அப்பர்
பாடல் கேளுங்கள்
 பூமென் கோதையுமை ஒருபாகனை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க