banner
சோழநாடு - இடும்பாவனம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 320 கி.மீ. திருத்துறைப்பூண்டியிலிருந்து 16 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 276 கி.மீ., சென்னையிலிருந்து 363 கி.மீ. திருச்சியிலிருந்து 117 கி.மீ. மதுரையிலிருந்து 215 கி.மீ.
வரிசை எண் : 225
சிறப்பு : இடும்பன் வழிபட்ட தலம். அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டியருளிய தலம். பிதுர் கடன் செய்ய உகந்த தலம்.
இறைவன் : சற்குணேஸ்வரர், சற்குணநாதர், இடும்பாவனேஸ்வரர்
இறைவி : மங்களவல்லி, மங்களநாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம், அகத்திய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சற்குணேஸ்வரர் திருக்கோயில், இடும்பாவனம் & அஞ்சல் – 614 735 திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.30 – 12.30 ; மாலை 04.30 – 08.30
தொடர்புக்கு : 04369-240200

இருப்பிட வரைபடம்


நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம்
பாரேறிய படுவெண்தலை கையிற் பலிகொள்ளா
கூறேறிய மடவாளொடு பாகம் மகிழ்வெய்தி
ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே 
               - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 நீறேறிய திருமேனியர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க