banner
கோயில் (சிதம்பரம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 200 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 190 கி.மீ., சென்னையிலிருந்து 240 கி.மீ. திருச்சியிலிருந்து 168 கி.மீ. மதுரையிலிருந்து 295 கி.மீ. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ.
வரிசை எண் : 55
சிறப்பு : கோயில் என்று சொன்னாலே அது சிதம்பரத்தைக் குறிக்கும். ஊரின் பெயர் தில்லை. தில்லை மரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் தில்லை என்ற பெயர். பெரும்பற்றப்புலியூர் என்ற பெயரும் உண்டு. சிதம்பரம் என்ற சொல்லுக்கு ஞானமே வெளியாக உள்ள தலம். சித் + அம்பரம் = சிதம்பரம். சித் என்றால் ஞானம். அம்பரம் என்றால் வெளி. மாணிக்கவாசகர், வியாக்கரபாதர், பதஞ்சலி, உபமன்யு, சுகர், திருநீலகண்டர், நந்தனார், கூற்றுவ நாயனார், கணம்புல்லர் போன்றோர்கள் முத்தி பெற்ற தலம். கோயிலுள் திருமூலட்டானம் என்னும் கோயில் உள்ளது. அர்த்தசாம பூசை முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் இங்கு வந்து ஒடுங்குவதாகப் பொருள். அர்த்தசாம வழிபாடு காணவேண்டிய ஒன்று. தினமும் இரவு 10 மணிக்கு இந்த பூசை தொடங்கும். நடராஜப்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம்தான் சிற்றம்பலம். உள்ளே செல்வதற்கு பஞ்சாக்கர படிகள் ஐந்து உண்டு. இந்தப்படிகளில் ஒன்றின் மேல் சித்தாந்த நூலான களிற்றுப்படியாரை வைக்க அதனை இந்தப் படிகளில் இருக்கும் ஒரு யானை எடுத்து இறைவன் திருவடியில் வைக்க அதனால் அதற்குத் திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டதாக கூறுவர். நடராஜரின் வலப்பக்கம் சிதம்பர இரகசியம் உள்ளது. நடராஜர் அபிஷேகம் கொண்டருளும் இடம் பொன்னம்பலம்.
இறைவன் : நடராசர், அம்பலக்கூத்தர், அம்பலவாணர், கூத்தபிரான்
இறைவி : சிவகாமி, சிவகாமசுந்தரி
தலமரம் : தில்லை, ஆல்
தீர்த்தம் : சிவகங்கை, பிரமதீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. நடராஜப்பெருமான் திருக்கோயில், சிதம்பரம் & அஞ்சல் – 608 001 சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 11.00
தொடர்புக்கு : 04144-227171

இருப்பிட வரைபடம்


செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே
			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 செல்வ நெடுமாடம்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க