banner
சோழநாடு - அவளிவணல்லூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 270 கி.மீ. அரித்துவாரமங்கலத்திலிருந்து மன்னார்குடி சாலையில் 3 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 265 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து 90 கி.மீ. மதுரையிலிருந்து 226 கி.மீ.
வரிசை எண் : 217
சிறப்பு : அவள் இவள் நல்லூர் என்பது அவளிவணல்லூர் என்றானது. முன்னொரு காலத்தில் அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்தப் பெண்ணுக்கு தந்தை மணம் முடித்தார். அவள் கணவன் தீர்த்த யாத்திரை சென்றான். அச்சமயம் அப்பெண்ணுக்கு அம்மை வார்த்து முகமெல்லாம் உரு மாறி கண்களும் இழந்தாள். சென்ற கணவன் ஊர் திரும்பியதும் அவள் தோற்றம் கண்டு அவள் தன் மனைவி அல்ல என்றும் இளையவள் தான் தன் மனைவி என்றும் கூறினான். மனம் கலங்கி தந்தை இறைவனை வேண்ட இறைவன் மூத்தவளே உன் மனைவி, அவள்தான் இவள் என என்று சுட்டிக்காட்டி மறைந்த்தாக வரலாறு. பின் மூத்த மனைவி தன் இழந்த பழைய தோற்றத்தையும் கண்களையும் பெற்றாள்.
இறைவன் : சாட்சிநாதர்
இறைவி : சௌந்தரநாயகி, சௌந்தரவல்லி
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர், அரித்துவாரமங்கலம் அஞ்சல் – 612 802 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 04374-316911

இருப்பிட வரைபடம்


நன்மைதான் அறியமாட்டான் நடுவிலா அரக்கர்கோமான்
வன்மையே கருதிச்சென்று வலிதனைச் செலுத்தலுற்றுக்
கன்மையான் மலையையோடிக் கருதித்தான் எடுத்துவாயால்
அம்மையோ என்ன வைத்தார் அவளிவணல்லூராரே 
           - அப்பர்
பாடல் கேளுங்கள்
 நன்மைதான் அறியமாட்டான்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க