banner
சோழநாடு - அம்பர் மாகாளம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 256 கி.மீ. அம்பர் பெருங்கோயிலுக்கு 1 கி.மீ. முன்பாக உள்ள தலம். செங்கல்பட்டிலிருந்து 244 கி.மீ., சென்னையிலிருந்து 289 கி.மீ. திருச்சியிலிருந்து 147 கி.மீ. மதுரையிலிருந்து 302 கி.மீ.
வரிசை எண் : 172
சிறப்பு : அம்பன், அம்பராசூரன் என்னும் அசுரர்களைக் கொன்ற பாவம் தீர காளி வழிபட்ட தலம். சோமாசிமாற நாயனார் சோம யாகம் செய்த தலம்.
இறைவன் : மாகாளேஸ்வரர், காளகண்டேஸ்வரர்
இறைவி : பட்சயாம்பிகை
தலமரம் : கருங்காலி
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. மாகாளேஸ்வரர் திருக்கோயில், கோயில் திருமாளம், பூந்தோட்டம் அஞ்சல் – 609 503 நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 9486601401

இருப்பிட வரைபடம்


அடையார்புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து
மடையார் புனல் அம்பர் மாகாளம் மேய
விடையார் கொடி எந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழல் ஏத்தச் சாரா வினைதானே
பாடல் கேளுங்கள்
 அடையார்புரம்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க