banner
திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 218 கி.மீ., கொள்ளிடத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து 108 கி.மீ., சென்னையிலிருந்து 258 கி.மீ. திருச்சியிலிருந்து 168 கி.மீ. மதுரையிலிருந்து 313 கி.மீ. சிதம்பரத்திலிருந்து 18 கி.மீ. கொள்ளிடம் பாலம் கடந்து இடப்பக்கம் செல்லும் சாலையில் 8 கி.மீ. செல்லவேண்டும்.
வரிசை எண் : 59
சிறப்பு : நல்லூர் ஊரின் பெயர். பெருமணம் கோயிலின் பெயர். திருஞானசம்பந்தர் தன் மனைவியோடும் மற்றும் சில அடியார்களோடும் தம் திருமணத்தன்றே இறை ஜோதியில் கலந்த தலம்.
இறைவன் : சிவலோகத்தியாகேசர்
இறைவி: வெண்ணீற்று உமைநங்கை, விபூதிகல்யாணி
தலமரம் : மா
தீர்த்தம் : பஞ்சாட்சர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சிவலோகத்தியாகேசர் திருக்கோயில், ஆச்சாள்புரம் & அஞ்சல் – 609 101 சீர்காழி வட்டம் நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 04364-277800

இருப்பிட வரைபடம்


அன்புறு சிந்தையராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவி நின்று
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே
 			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 அன்புறு சிந்தையராகி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க