வெளி நாடு - திருக்கயிலாயம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 4700 கி.மீ., சென்னையிலிருந்து இரயில் முலமாகவோ அல்லது விமானம் மூலமாகவோ டெல்லி சென்று (2200 கி.மீ.) அங்கிருந்து விமானம் மூலம் நேபாள நாட்டின் தலைநகரான காட்மண்டு (1500 கி.மீ.) செல்லவேண்டும். அங்கிருந்து கார் மூலம் 800 கி.மீ. பயணம் செய்து டார்ச்சன் என்னும் இடம் வந்து அங்கிருந்து 150 கி.மீ.,பயணம் செய்தால் கண்கொள்ளாக் காட்சியான அந்த கயிலை நாதனைக் காணலாம். இந்த 150 கி.மீ.ல் 51 கி.மீ. கிரி வலமும், மானசரோவர் ஏரி வலமும் அடக்கம். கிரி வலம் என்பது கால் நடையாகவோ அல்லது குதிரை மூலமாகவோ செல்லலாம். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு வரை திருக்கயிலாயம் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. அதற்குப் பின்னால் சீனாவின் வசம் ஆனது.
குறிப்பு : அடியேனுடைய திருக்கயிலைப் பயணத்தை, ‘நாயகன் இருக்கை கண்டேன்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். வேண்டுபவர்கள் எம்மைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்
வரிசை எண் : 272
சிறப்பு : இறைவன் பனி மலையாக காட்சி அளிக்கிறான். அதிகாலையில் இறைவன் பொன்னிறமாகவும் அதன்பின் வெள்ளி நிறமாகவும் காட்சி அளிக்கிறான். கிரி வலத்தின்போது கௌரி குண்டம் பார்க்கலாம். அம்பாள் குளிக்கு இடம் எனப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 19500 அடி உயரம்.
இறைவன் : கயிலைநாதன்
இறைவி : கயிலைநாயகி
பாடல் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்

இருப்பிட வரைபடம்


வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
 மீளாமே ஆளென்னை கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
 ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
 ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
 கயிலை மலையானே போற்றி போற்றி 
    		             - வாகீசர்
பாடல் கேளுங்கள்
 வேற்றாகி விண்ணாகி


Zoomable Image

வெளி நாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க