வட நாடு - திருக்கேதாரம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து (டெல்லி வழியாக) 2705 கி.மீ., சென்னையிலிருந்து இரயில் மூலமாக 2150 கி.மீ., பயணம் செய்து டெல்லி அடைந்து டெல்லியிலிருந்து பேருந்து மூலம் (அரித்துவார் வழியாக) 480 கி.மீ., செல்லவேண்டும். இங்கிருந்து 15 கி.மீ. கோயிலுக்கு நடந்தோ அல்லது டோலியிலோ அல்லது குதிரையிலோ செல்லலாம். அருகில் 15 கி.மீ. தொலைவில் உள்ள பாட்டா என்ற இடத்திலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. ஹெலிகாப்டரில் செல்ல 2009 ஆம் ஆண்டு நிலவரப்படிப் போகவர 7500 ரூபாய் வாங்கினார்கள். திருச்சியிலிருந்து 3000 கி.மீ., மதுரையிலிருந்து 3130 கி.மீ. மே முதல் அக்டோபர் மாதம் வரை செல்லலாம். அதன் பிறகு கோயில் மூடப்பட்டு மே மாதம்தான் திறக்கப்படும்.
வரிசை எண் : 271
சிறப்பு : அம்பாள் வழிபட்டு இறைவனிடம் இடப்பாகத்தைப் பெற்றத் தலம். பாண்டவர்கள் வழிபட்ட தலம். கோயிலுக்குப் பின்னால் ஆதிசங்கரருடைய (சமாதி) கோயில் உள்ளது. திருப்பனந்தாள் மடத்தின் முயற்சியால் இங்கே சம்பந்தர் மற்றும் சுந்தரரின் பதிகக் கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.
இறைவன் : கேதாரேஸ்வரர்
இறைவி : கேதாரகௌரி
தலமரம் : -
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர், சுந்தரர்

இருப்பிட வரைபடம்


தொண்டர் அஞ்சுகளிறும் அடக்கிச் சுரும்பார் மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டுபாட மயில் ஆல மான்கன்றுதுள்ள வரிக்
கெண்டைபாயச் சுனைநீலம் மொட்டு அலரும் கேதாரமே
					- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 தொண்டர் அஞ்சுகளிறும்


Zoomable Image

வட நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க