அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து (டெல்லி வழியாக) 2780 கி.மீ., சென்னையிலிருந்து இரயில் மூலமாக 2150 கி.மீ.,
பயணம் செய்து டெல்லி அடைந்து டெல்லியிலிருந்து பேருந்து மூலம் 555 கி.மீ., சென்றால்
வைணவத்தலமான பத்ரிநாத் அடையலாம். இங்கிருந்து பார்த்தால் இந்திரநீலபருப்பதம் தெரியும்.
திருச்சியிலிருந்து இரயில் மூலம் 3080 கி.மீ. மதுரையிலிருந்து இரயில் மூலம் 3210 கி.மீ.
வரிசை எண் : 269
சிறப்பு : இமயமலைச் சாரலில் அமைந்த தலம். பத்ரிநாத்திலிருந்து அதிகாலை 4 மணிக்குப் பார்த்தோமானால்
எதிரில் நீல நிறத்தில் ஒரு மலை தெரியும். அதுவே இந்திரநீலபருப்பதம். 5 மணிக்குள் அந்தக் காட்சி
மறைந்துவிடும். அதன் பிறகு தங்க நிறத்திலும் பிறகு வெண்மை நிறத்திலும் காட்சியளிக்கிறார்.
இந்திரன் வழிபட்ட தலம். இங்குள்ளவர்கள் இம் மலையை நீல்கண்ட் என்று அழைக்கிறார்கள்.
இறைவன் : நீலாசலநாதர்
இறைவி : நீலாம்பிகை
தலமரம் : -
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
இருப்பிட வரைபடம்
| |