வட நாடு - அநேகதங்காபதம் (கௌரிகுண்டம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து (டெல்லி வழியாக) 2690 கி.மீ., சென்னையிலிருந்து இரயில் மூலமாக 2150 கி.மீ., பயணம் செய்து டெல்லி அடைந்து டெல்லியிலிருந்து பேருந்து மூலம் (அரித்துவார் வழியாக) 480 கி.மீ., சென்றால் கேதார்நாத் அடையலாம். இத்தலத்திற்கு 15 கி.மீ. முன்னால் பாட்டா என்ற இடம் வரும். இந்த இடத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அநேகதங்காவதம் உள்ளது. திருச்சியிலிருந்து இரயில் மூலம் 2990 கி.மீ. மதுரையிலிருந்து இரயில் மூலம் 3120 கி.மீ.
வரிசை எண் : 270
சிறப்பு : இமயமலைச் சாரலில் அமைந்த தலம். இங்குள்ளவர்கள் இத் தலத்தை கௌரிகுண்ட் என்று அழைக்கிறார்கள். அம்பிகை தவம் செய்த இடம். இங்குள்ள வெந்நீர் ஊற்றில் நீராடும் சுகமே அலாதி. சிறிய கோயில்
இறைவன் : அருள்மன்னேஸ்வரர்
இறைவி : மனோன்மணி
தலமரம் : -
தீர்த்தம் : வெந்நீர் ஊற்று
பாடல் : சம்பந்தர்

இருப்பிட வரைபடம்


தந்தத்திந்தத் தடமென்றருவித் திரள்பாய்ந்து போய்ச்
சிந்தவெந்த கதிரோனொடு மாசறு திங்களார்
அந்தமில்ல அளவில்ல அனேகதங்காபதம்
எந்தைவெந்த பொடி நீறணிவார்க்கு இடமாவதே
    		             - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 தந்தத்திந்தத் தடமென்


Zoomable Image

வட நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க