துளுவ நாடு - திருக்கோகர்ணம்

துளுவ நாடு என்பது கன்னட நாடு. அதாவது கர்நாடக மாநிலம். இம் மாநிலத்தில் பெல்லாரி மவட்டத்தில் உள்ள ஒரே பாடல் பெற்றத் தலம் திருக்கோகர்ணம்.

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து (பெங்களூரு வழியாக) 950 கி.மீ., இரயில் மூலமாக வருவதானால் (1270 கி.மீ) சென்னையிலிருந்து மங்களூர் 907 கி.மீ., மங்களூரிலிருந்து இரயில் மூலம் 312 கி.மீ. பயணம் செய்து கோகர்ணா ரோடு என்ற நிலையம் வந்து அங்கிருந்து 5 கி.மீ. ஆட்டோ மூலம் கோயில் வரலாம். திருச்சியிலிருந்து 941 கி.மீ. மதுரையிலிருந்து 912 கி.மீ.
சிறப்பு : இராவணன் ஒரு முறை இலங்கையில் பிரதிட்டை செய்வதற்காக இறைவனிடம் ஒரு இலிங்கம் பெற்று வரும் வழியில் சற்று இளைப்பாற வேண்டி இலிங்கத்தைத் தரையில் வைத்தான். மீண்டும் எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் முடியாமல் சுவாமி பசுவின் காது போல் குழைந்துவிட்டார். அங்கேயே விட்டு விட்டு இராவணனும் சென்று விட்டான். பசுவின் காது போல் இலிங்கம் குழைந்து விட்டதால் கோகர்ணம் என்று பெயரானது. கோ என்றால் பசு, கர்ணம் என்றால் காது. இறைவனுக்கும் மகாபலேஸ்வரர் என்று பெயரானது.
இறைவன் : மகாபலேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
இறைவி : கோகர்ணேஸ்வரி, தாம்ரகௌரி
தலமரம் : -
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : Arulmigu. Mahabaleswarar Temple Gokarna & Post – 576 234. Karnataka
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 08386-257167, 08386-256167

இருப்பிட வரைபடம்

சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
    தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்
அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்
    அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
    பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. - அப்பர்
பாடல் கேளுங்கள்
சந்திரனுந் தண்புனலுஞ்



துளுவ நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க