தெலுங்கு நாடு - திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)

தெலுங்கு நாடு என்பது ஆந்திர மாநிலம். இந்த மாநிலத்தில் கர்நூல் மாவட்டதில் உள்ள ஒரே பாடல் பெற்றத் தலம் பருப்பதம் என்று தேவாரகாலத்தில் அழைக்கப்பட்ட ஸ்ரீசைலம்.

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து (குண்டக்கல் வழியாக) இரயில் மூலமாக 965 கி.மீ., சென்னையிலிருந்து குண்டக்கல் 450 கி.மீ., குண்டக்கல்லிலிருந்து இரயில் மூலம் மர்காபூர் ரோடு 425 கி.மீ. பயணம் செய்து அங்கிருந்து 2 கி.மீ. மர்க்காபூர் வந்து பின் அங்கிருந்து பேருந்து மூலம் 40 கி.மீ. மலை ஏற வேண்டும். திருச்சியிலிருந்து இரயில் மூலம் திருப்பதி 448 கி.மீ. மதுரையிலிருந்து இரயில் மூலம் திருப்பதி 578 கி.மீ. திருப்பதியிலிருந்து 500 கி.மீ.
வரிசை எண் : 268
சிறப்பு : ஜோதிர்லிங்கத்தலங்களுள் ஒன்று. சந்திரவதி என்ற பெண் அடியார் மல்லிகை மலர்களால் அருச்சனை செய்த்தால் மல்லிகார்ஜுனம் என்றும் அழைக்கப்படும். சிலாத முனிவர் வழிபட்டதால் ஸ்ரீசைலம் என்றும் அழைக்கப்படுகிறது. நந்தி தேவர் இங்கு தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார்.
இறைவன் : மல்லிகார்ஜுனர், ஸ்ரீசைலநாதர்
இறைவி : பிரமராம்பிகை
தலமரம் : மருதமரம்
தீர்த்தம் : பாலாழி,br> பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : Arulmigu. Mallikarjuneswar Temple, Srisailam & Post – 518 100 Kurnool Dt., Andhrapradesh.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.00 ; இரவு 10.00
தொடர்புக்கு : 08524-287130

இருப்பிட வரைபடம்


கரவிலா மனத்த ராகிக் கைதொழு வார்கட் கென்றும்
இரவுநின் றெரிய தாடி இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் ஆட்டிய வகைய ராகிப்
பரவுவார்க்கு அருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே.
    		             - அப்பர்
பாடல் கேளுங்கள்
 கரவிலா மனத்த ராகிக்


Zoomable Image

தெலுங்கு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க