திருச்சுழியல் (திருச்சுழி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 504 கி.மீ., சென்னையிலிருந்து 561 கி.மீ., திருச்சியிலிருந்து 198 கி.மீ. அருப்புக்கோட்டையிலிருந்து 15 ஆவது கி.மீ. ல் உள்ளது.
வரிசை எண் : 256
சிறப்பு : இறைவன் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார். எனவே இத்தலம் திருச்சுழியல் எனப்பட்டது. இரமண மகரிஷியின் அவதாரத் தலம் இது. அவருடைய வீட்டை தற்போது நினைவிடமாக மாற்றி உள்ளார்கள்.
இறைவன் : திருமேனிநாதர், சுழிகேசர்
இறைவி : துணைமாலையம்மை, சகாயவல்லி
தலமரம் : அரசு, புன்னை
தீர்த்தம் : கவ்வைக்கடல் தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சழி & அஞ்சல் – 626 129 , திருச்சழி, விருதுநகர் மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04566-282644


கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கேற்றக்
கொவ்வைத் துவர் வாயார் குடைந்தாடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்தெழுவார் அடி தொழுவார்
அவ்வைத் திசைக்கு அரசாகுவர் அலராள் பிரியாளே 

			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 கவ்வைக் கடல்


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க