திருப்புத்தூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 547 கி.மீ., மதுரையிலிருந்து காரைக்குடி சாலையில் 67 கி.மீ., சென்னையிலிருந்து 564 கி.மீ. திருச்சியிலிருந்து 228 கி.மீ. கரைக்குடியிலிருந்து 20 கி.மீ., குன்றக்குடியிலிருந்து 12 கி.மீ., பிள்ளையார்பட்டியிலிருந்து 9 கி.மீ.
வரிசை எண் : 250
சிறப்பு : ஊர் பெயர் திருப்புத்தூர். கோயிலின் பெயர் திருத்தளி. நடராஜர் சந்நிதியில் அமைந்திருக்கும் மண்டபத்தில் இருக்கும் ஐந்து கல் தூண்கள் இசைத்தூண்களாக உள்ளன. அவற்றைத் தட்டினால் மெல்லிய இனிமையான ஓசை வெளிப்படுகிறது. பைரவர் சந்நிதி இங்கு விசேடமானது. இச் சந்நிதியின் மண்டபம் மருது சகோதரர்களால் கட்டப்பட்டது.
இறைவன் : திருத்தளிநாதர், ஸ்ரீதளீஸ்வரர்
இறைவி : சிவகாமி
தலமரம் : சரக்கொன்றை
தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புதூர் & அஞ்சல் – 623 211 சிவகங்கை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 9367148201, 9842656647


மின்காட்டும் கொடி மருங்குல் உமையாட்கென்றும்
விருப்பவன் காண் பொருப்பு வலிச்சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி
நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டும் செழும் புறவில் திருப்புத்தூரின்
திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே
 			- அப்பர்
பாடல் கேளுங்கள்
 மின்காட்டும் கொடி மருங்குல்


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க