திருப்புனவாயில் (திருப்புனவாசல்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 584 கி.மீ., மதுரையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் 85 ஆவது கி.மீ.ல் திருஆடானை எனும் தலம். இங்கிருந்து 19 கி.மீ. இடப்புறம் சென்றால் இத்தலம். சென்னையிலிருந்து 601 கி.மீ. திருச்சியிலிருந்து 265 கி.மீ. ஆவுடையார் கோயிலிலிருந்து 21 கி.மீ., பாம்பாறு நதியின் கரையில் இத்தலம் உள்ளது.
வரிசை எண் : 251
சிறப்பு : பாண்டிய நாட்டின் 14 தல இலிங்கங்களின் சந்நிதிகளை இங்கே காணலாம். மூலவரின் ஆவுடையார் மிகப்பெரிது. ஒரு சுற்றுக்கு 30 முழம் தேவை. அது போல் பாணத்திற்கு 3 முழம் தேவை. இங்குள்ளவர்கள் 3 முழம் 30 முழம் கோயில் என்றே இதனை அழைகின்றனர். சுவாமியின் திருமேனி 9 அடி உயரம். ஆவுடையார் சுற்றளவு 33 அடி.
இறைவன் : விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர், மகாலிங்கேஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தலமரம் : சதுரக்கள்ளி, குருந்து
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல் & அஞ்சல் – 614 629 (வழி) பொன்பேத்தி, ஆவுடையார்கோயில் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 11.30 ; மாலை 05.00 – 07.30
தொடர்புக்கு : 9965211768, 04371-239202, 04371-239212


மின்னியல் செஞ்சடை வெண்பிறையான் விரிநூலினன்
பன்னிய நான்மறை பாடியாடிப் பலவூர்கள் போய்
அன்னம் அன்னந் நடையாளொடும் அமருமிடம்
புன்னை நன்மாமலர் பொன்னுதிர்க்கும் புனவாயிலே 
 			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மின்னியல் செஞ்சடை


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க