திருப்பூவணம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 525 கி.மீ., சென்னையிலிருந்து 568 கி.மீ., திருச்சியிலிருந்து 165 கி.மீ. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் சாலையில் 15 ஆவது கி.மீ. ல் உள்ளது.
வரிசை எண் : 255
சிறப்பு : பொன்னனையாள் என்பவள் சிவனடியார்களை உபசரித்த தலம். இவள் பொருட்டு இறைவன் சித்தராக வந்து பொன் கொடுக்க அவள் அப்பொன்னைக் கொண்டு சிவலிங்கம் செய்து அதன் அழகைக் கண்டு அத் திருமேனியைக் கிள்ளி முத்தமிட்டாளாம். அவள் கிள்ளிய அடையாளம் இன்றும் பெருமான் திருமேனியில் காணலாம். கோயிலில் பொன்னனையாளுடைய திருமேனியையும் காணலாம்.
இறைவன் : புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர்
இறைவி : சௌந்தரநாயகி, மின்னனையாள்
தலமரம் : பலா
தீர்த்தம் : வைகை தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. பூவணநாதர் திருக்கோயில், திருப்பூவணம் & அஞ்சல் – 623 611 இராமநாதபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 01.00 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 9443501761


வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
 				- அப்பர்
பாடல் கேளுங்கள்
 வடிவேறு திரிசூலம்


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க