திருநெல்வேலி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 600 கி.மீ., சென்னையிலிருந்து 657 கி.மீ., திருச்சியிலிருந்து 294 கி.மீ. மதுரையிலிருந்து 157 ஆவது கி.மீ. ல் உள்ளது.
வரிசை எண் : 258
சிறப்பு : வேதபட்டர் நெல்லைக் காயப்போட்டிருந்தபோது அது நனையாமல் இறைவன் காப்பாற்றியமையால் நெல்வேலி எனப்பட்டது. கோயில் 14 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. மூன்று தெப்பக்குளங்கள் உள்ளன. உச்சிக் கால பூசையை காந்திமதி அம்பாளே வந்து செய்வதாக வரலாறு. அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய தலம். பஞ்ச சபைகளுள் இது தாமிர சபை. அம்பாள் சந்நிதியின் முன்புள்ள மண்டபத்தில் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன.
இறைவன் : நெல்லையப்பர், நெல்வேலிநாதர்
இறைவி : காந்திமதியம்மை, வடிவுடையம்மை
தலமரம் : மூங்கில்
தீர்த்தம் : பொற்றாமரைக்குளம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி – 627 001 திருநெல்வேலி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.30 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0462-2339910


மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினில் கொன்றை பொன் சொரிதரத்துன்று பைம்பூ
செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர்தாமே 
				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மருந்தவை மந்திரம்


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க