திருக்குற்றாலம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 637 கி.மீ., சென்னையிலிருந்து 618 கி.மீ., திருச்சியிலிருந்து 330 கி.மீ. மதுரையிலிருந்து 195 ஆவது கி.மீ. ல் உள்ளது. தென்காசியிலிருந்து 6 கி.மீ
வரிசை எண் : 257
சிறப்பு : பபஞ்ச சபைகளுள் இது சித்திர சபை. திருமால் வடிவில் இருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியாக மாற்றினார். மலைகள் சூழ்ந்த தலம். கோயிலுக்குப் பக்கத்தில் பேரருவி மற்றும் ஐந்தருவி. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அருவியில் நீர் இருக்கும். கோயில் சங்கு வடிவில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் தனி கோயிலாக சித்திர சபை உள்ளது. நடராஜர், சிவகாமி, மன்மதன், இரதி, சிங்கமுகன், சூரபத்மன் போன்றோரின் உருவங்கள் வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளன.
இறைவன் : குற்றாலநாதர், குரும்பலாஈசர், திரிகூடாசலபதி
இறைவி : குழல்வாய்மொழியம்மை
தலமரம் : குரும்பலா
தீர்த்தம் : வட அருவி
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம் & அஞ்சல் – 627 802 திருநெல்வேலி மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04633-283138>


வம்பார் குன்றம் நீடுயர்சாரல் வளர் வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டு யாழ் செய்குற்றாலம்
அம்பா நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை
நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள் 
 			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 வம்பார் குன்றம்


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க