திருக்கானப்பேர் (காளையார்கோயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 500 கி.மீ., சிவகங்கையிலிருந்து 20 கி.மீ. சென்னையிலிருந்து 480 கி.மீ., திருச்சியிலிருந்து 150 கி.மீ.
வரிசை எண் : 254
சிறப்பு : இறைவன் காளை வடிவும் கையில் பொற்செண்டும் கொண்டு சுந்தரருக்குக் காட்சி கொடுத்த தலம். கானப்பேரூர் என்றும் அழைக்கப்படுகிறது. பெரிய கோபுரம் மருது பாண்டி சகோதரர்களால் கட்டப்பட்டது. இவர்கள் கட்டிய இந்தக் கோபுரத்தை பிணையாக வைத்து ஆங்கிலேயர்கள், சரணடையாவிட்டால் கோபுரத்தை இடித்துவிடுவோம் என்று கூறி மருது பாண்டியரைக் கைது செய்து பின் அவர்களைத் தூக்கிலிட்டனர். இங்கே மூன்று சந்நிதிகள்.
இறைவன் : காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர்
இறைவி : சொர்ணவல்லி, சௌந்தரநாயகி, மீனாட்சி
தலமரம் : -
தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. காளேஸ்வரர் திருக்கோயில், காளையார்கோயில் & அஞ்சல் – 623 551 சிவகங்கை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 006.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04575-232516


தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும்
சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும்
புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள்
பூசலிடக் கடல் நஞ்சுண்ட கருத்து அமரும்
கொண்டல் எனத் திகழும் கண்டமும் எண்தோளும்
கோல நறுஞ்சடை மேல் வண்ணமும் கண்குளிரக்
கண்டு தொழப் பெறுவது என்றுகொலோ அடியேன்
கார்வயல் சூழ் கானப்பேர் உறை களையையே 
 			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 தொண்டர் அடித்தொழலும்


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க