திருஆப்பனூர் (ஆப்புடையார் கோயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 482 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 445 கி.மீ., சென்னையிலிருந்து 499 கி.மீ. திருச்சியிலிருந்து 163 கி.மீ. பேருந்து நிலயத்திலிருந்து 2 கி.மீ ல் கோயில்.
வரிசை எண் : 246
சிறப்பு : சோழாந்தகன் என்னும் பாண்டிய மன்னன் பொருட்டு ஒரு ஆப்பினிடத்தில் இருந்து இறைவன் வெளிப்பட்டு அருளிய தலம்.
இறைவன் : இடபுரேசர், அன்னவினோதன், ஆப்புடையார்
இறைவி : குரவங்கமழ் குழலி
தலமரம் : -
தீர்த்தம் : வைகை, இடபதீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஆப்புடையார் திருக்கோயில், ஆப்புடையார் கோயில் & அஞ்சல் – 625 002 மதுரை – 625 002
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 11.00 ; மாலை 05.00 – 09.00
தொடர்புக்கு : 0452-2530173, 9443676174


முற்றும் சடைமேல் முதிரா இளம்பிறையன் 
ஒற்றைப்பட அரவம் அதுகொண்டு அரைக்கணிந்தான்
செற்றமில் சீரானை திருஆப்பனூரானைப்
பற்றும் மனமுடையார் வினை பற்றறுப்பாரே
						- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 முற்றும் சடைமேல் முதிரா


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க