திருஏடகம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 497 கி.மீ., மதுரையிலிருந்து சோழவந்தான் சாலையில் 17 கி.மீ., சென்னையிலிருந்து 514 கி.மீ. திருச்சியிலிருந்து 178 கி.மீ. மதுரை பேருந்து நிலயத்திலிருந்து 17 கி.மீ ல் கோயில்.
வரிசை எண் : 248
சிறப்பு : திருஞானசம்பந்தரோடு சமணர்கள் நிகழ்த்திய புனல் வாதத்தில் திருஞானசம்பந்தர் வைகையில் இட்ட ஏடு ஆற்று நீரை எதிர்த்து கரையேறிய இடம் இந்த திருஏடகம்.
இறைவன் : ஏடகநாதேஸ்வரர்
இறைவி : ஏலவார்குழலி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஏடகநாதேஸ்வரர் திருக்கோயில், திருஏடகம் & அஞ்சல் – 624 234 மதுரை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04543-259311


ஏலமார் தருகுழல் ஏழையோடு எழில் பெறும்
கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடம்
சால மாதவிகளும் சந்தனம் சண்பகம்
சீலமார் ஏடகம் சேர்தலம் செல்வமே
						- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 ஏலமார் தருகுழல் ஏழையோடு


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க