இராமேஸ்வரம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 510 கி.மீ., மதுரையிலிருந்து 170 கி.மீ. சென்னையிலிருந்து 553 கி.மீ. திருச்சியிலிருந்து 230 கி.மீ. இராமநாதபுரத்திலிருந்து 55 கி.மீ. இரயில் மூலம் சென்னையிலிருந்து 665 கி.மீ.
வரிசை எண் : 252
சிறப்பு : தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஜோதிர்லிங்கத் தலம். இராவணனைக் கொன்ற பாவம் நீங்க இராமர் சிவனைப் பூசித்த தலம். மூலவர் மணல் இலிங்கம். அநுமன் கொண்டு வந்த இலிங்கம் பக்கத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு வந்து நீராடினால்தான் காசி சென்று வந்த பலன் பூர்த்தியாகும் என்பது மரபு. கடலே அக்னி தீர்த்தம். கோயிலுக்குள்ளே 22 தீர்த்தங்கள் உள்ளன. கோடி தீர்த்தம்தான் 22 ஆவது தீர்த்தம். வெளிப்பிரகாரத்தில் 1200 தூண்கள் உள்ளன.
இறைவன் : இராமநாதசுவாமி, இராமலிங்கேஸ்வரர்
இறைவி : பர்வதவர்தினி, மலைவளர்காதலி
தலமரம் : -
தீர்த்தம் : 22 தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் & அஞ்சல் – 623 526
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 904573-221223, 04573-223567


கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்புகொண்டு
தேடிமால் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தை
நாடிவாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகுமன்றே 
 						- அப்பர்
பாடல் கேளுங்கள்
 கோடிமா தவங்கள் செய்து குன்றினார்


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க