கொடுங்குன்றம் (பிரான்மலை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 550 கி.மீ., மதுரையிலிருந்து மேலுர் சாலையில், சிங்கம்புணரி என்ற ஊர் வழியாக 70 கி.மீ., சென்னையிலிருந்து 567 கி.மீ. திருச்சியிலிருந்து 231 கி.மீ.
வரிசை எண் : 249
சிறப்பு : மலையின் சரிவில் கோயில் உள்ளது. மலைக்குப் படிகள் உண்டு. குன்றின் மேல் இருக்கும் மூலவர் கல்யாண கோலத்தில் குகையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளார். இக்கோயில் மேற்புறம், நடுப்புறம், இடப்புறம் என்று முன்று பிரிவுகளாக சொர்க்கம், அந்தரம், பூமி ஆகியவற்றைக் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளன. சொர்கத்தில் மங்கைபாகரும், அந்தரத்தில் பைரவரும், பூமியில் கொடுங்குன்றநாதரும் எழுந்தருளியுள்ளனர்.
இறைவன் : உமாமகேஸ்வரர், மங்கைபாகர்
இறைவி : தேனாம்பிகை
( இவரைத் தரிசித்துக் கீழ் இறங்கினால் வலப்புறம் பைரவர் சந்நிதி உள்ளது. அவரைத் தரிசனம் செய்து கீழிறங்கினால் வலப்பால் கடோரகிரீஸ்வரர் சந்நிதி உள்ளது.) இறைவன் : கொடுங்குன்றநாதர், கடோரகிரீஸ்வ
ரர்
இறைவி : குயிலமுதநாயகி, அமிர்தேஸ்வரி
தலமரம் : உறங்காப்புளி, பெயரில்லா மரம்
தீர்த்தம் : தேனாழி
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. உமாமகேஸ்வரர் திருக்கோயில், பிரான்மலை & அஞ்சல் – 624 503 பசும்பொன் சிவகங்கை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : ----------


வானில் பொலிவெய்தும் மழைமேகம் கிழித்தோடிக்
கூனல்பிறை சேரும் குளிர்சாரல் கொடுங்குன்றம்
ஆனில் பொலியைந்தும் அமர்ந்தாடி உலகேத்த
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திருநகரே
 						- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 வானில் பொலிவெய்தும் மழைமேகம்


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க