ஆலவாய் (மதுரை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 480 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 443 கி.மீ., சென்னையிலிருந்து 497 கி.மீ. திருச்சியிலிருந்து 161 கி.மீ. இரயில் எதிரில் 1 கி.மீ ல் கோயில்.
வரிசை எண் : 245
சிறப்பு : புலவர்களுடன் சேர்ந்து இறைவனும் தமிழ் ஆராய்ந்த தலம். சைவம் தழைக்கவும் பாண்டிய மன்னன் சைவம் திரும்பவும் காரணமாயிருந்த மங்கையர்க்கரசியாரும் (பாண்டியனின் மனைவி) மற்றும் பாண்டிய நாட்டு அமைச்சர் குலச்சிரையாரும் வாழ்ந்த தலம். தமிழ்ச்சங்கம் தோன்றிய தலம். மூர்த்தி நாயனார் வாழ்ந்த தலம். பஞ்ச சபைகளுள் இது வெள்ளிச் சபை. ஊரின் பெயர் மதுரை. கோயிலின் பெயர் ஆலவாய். ஆலகால விஷத்தை இறைவன் மதுரமமாக மாற்றியதால் இத்தலத்திற்கு மதுரை என்ற பெயர். இங்கு அம்பளுக்கே முக்கியத்துவம். பொற்றாமரைக் குளம் கிழக்குக் கோபுர வாயிலில் அமைந்துள்ளது. இந்திரன் தன் வழிபாட்டிற்காக பொன் மலர் பறித்த குளம். திருக்குறளை அரங்கேற்ற சங்கப் பலகையை வரவழைத்த குளம். கிழக்கு வாயிலில் வழியாக உள்ளே வரும்போது அம்பாள் மீனாட்சியைத் தரிசிக்கலாம். திங்கள்தோறும் அம்பாளுக்குத் தங்கக்கவசமும் வைரக்கிரீடமும் அணிவிக்கப்படுகின்றன. சுவாமி சந்நிதிக்குப் போகும் வழியில் முதலில் முக்குறுணி விநாயகரைத் தரிசனம் செய்யலாம். அடுத்து வெள்ளியம்பலத்தில் இறைவன் கால் மாறி ஆடும் அழகு. ஆயிரம்கால் மண்டபம் மிக அழகு. எங்கிருந்து பார்த்தாலும் தூண்களின் வரிசைக் கிரமம் வியக்க வைக்கிறது. வடக்குக் கோபுர வாயில் வழியாக வந்தோமானால் ஐந்து இசைத்தூண்களைக் காணலாம். மதுரையில் நாயக்கர் மஹால் பார்க்கவேண்டிய ஒன்று.
இறைவன் : சோமசுந்தரர், சொக்கநாதர்
இறைவி : மீனாட்சி, அங்கயற்கண்ணி
தலமரம் : கடம்பு
தீர்த்தம் : பொற்றாமரைக்குளம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. மீனாட்சியம்மை சமேத சோமசுந்தரர் திருக்கோயில், மதுரை – 625 001
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.00 – 12.00 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 04542-2344360, 04542-272222

இருப்பிட வரைபடம்


மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக்கை மடமானி
பங்கயச்செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவாதும் இதுவே 
				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மங்கையர்க்கரசி


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க