திருவெண்ணை நல்லூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 140 கி.மீ., விழுப்புரத்திலிருந்து அரசூர் வழியாக 20 கி.மீ., திருக்கோயிலூரிலிருந்து எடையார் வழியாக 20 கி.மீ., பண்ருட்டியிலிருந்தும் அரசூர் வழியாக வரலாம். திருவெண்ணைநல்லூர் இரயில் நிலயத்திலிருந்து 7 கி.மீ., சென்னையிலிருந்து 180 கி.மீ. திருச்சியிலிருந்து 150 கி.மீ. மதுரையிலிருந்து 280 கி.மீ.
வரிசை எண் : 46
சிறப்பு : சுந்தரரை இறைவன் வலிய வழக்கிட்டு ஆட்கொண்ட தலம். சுந்தரரின் முதல் பாடலான பித்தா பிறைசூடீ என்ற பாடல் பிறந்த தலம். ஊரின் பெயர் திருவெண்ணைநல்லூர். கோயிலின் பெயர் திருவருட்டுறை. சுந்தரரோடு இறைவன் வாதிட்ட மண்டபம் கொடிமரத்திற்கு அருகில் உள்ளது. மெய்கண்டார் வாழ்ந்த தலம்.
இறைவன் : கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர்
இறைவி : மங்களாம்பிகை, வேற்கண்ணியம்மை
தலமரம் : மூங்கில்
தீர்த்தம் : தண்ட தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருவெண்ணைநல்லூர் & அஞ்சல் – 607 203 திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04153-234548, 9994270882

இருப்பிட வரைபடம்


பித்தா பிறைசூடீ பெரு மானே அருளாளா 
எத்தான் மறவாதே நினைக் கின்றேன் மனத்துன்னை 
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் 
                             அருள்துறையுள் 
அத்தா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே. 
			-  சுந்தரர்
பாடல் கேளுங்கள்
  பித்தா பிறைசூடீ


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க