அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 170 கி.மீ., கடலூர் – சிதம்பரம் சாலையில் 22 ஆவது கி.மீ.ல் ஆலப்பாக்கம் உள்ளது.
அதற்கு அடுத்து மேட்டுப்பாளையம் என்னும் ஊர் வந்து வலப்பக்கம் செல்லும் சாலையில் 7 கி.மீ.
சென்றால் கோயில். சென்னையிலிருந்து 212 கி.மீ. திருச்சியிலிருந்து 213 கி.மீ.
மதுரையிலிருந்து 373 கி.மீ.
வரிசை எண் : 37
சிறப்பு : ஒரு குடியானவன் பொருட்டு இறைவன் அவன் நிலத்தில் தினை விளையச் செய்தமையால்
திருத்தினைநகர் என்றாயிற்று
இறைவன் : சிவகொழுந்தீசர்
இறைவி : நீலாதாட்சி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : ஜாம்பவ தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சிவகொழுந்தீசர் திருக்கோயில், தீர்த்தனகிரி & அஞ்சல் – 608 801,
கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 9965328278, 9965328279
குறிப்பு : அடியேன் (இத்தளத்தின் உரிமையாளர்) மேற்கண்ட தீர்த்தனகிரி தலத்திற்குத் தரிசனத்திற்காக
வந்தபோது மேட்டுப்பாளையத்திலிருந்து இக்கோயிலுக்கு வர பேருந்து ஏதும் கிடைக்கவில்லை. அங்கே இருந்த ஒரு சைக்கிள்
கடை உரிமையாளரிடம் சென்று தீர்த்தனகிரி சென்றுவர சைக்கிள் தாருங்கள் என்று கேட்டேன். “எனக்கு ஆள் தெரியாது. இந்த
ஊரில் எவரையாவது பொறுப்பு சொல்லச் சொன்னல் தருகிறேன்” என்றார். அந்த ஊரில் எனக்கு யாரையும் தெரியாது. எனவே
“பிணைத் தொகையாக ரூபாய் 1000 தருகிறேன். எனக்கு சைக்கிள் தாருங்கள். அரை மணி நேரத்தில் சுவாமி தரிசனம்
செய்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று எவ்வளவோ சொல்லிப்பார்தேன். அவர் தருவதாக இல்லை. இவ்வளவு தொலைவு வந்து
உன்னைப் பார்க்காமல் செல்ல வேண்டியிருக்கிறதே பெருமானே என்று இறைவனை வேண்டினேன். அந்த சைக்கிள் கடையில்
வேலை செய்யும் ஒரு சிறுவன் (சுமார் 10 வயது இருக்கும்), “என்னுடைய சைக்கிளைத் தருகிறேன், எடுத்துக்கொண்டு போய்
வாருங்கள்” என்று சொல்லி அவனுடைய சைக்கிளைத் தந்தான். இறைவன் கருணையை நினைந்து மனம் நெகிழ்ந்து அவன்
சைக்கிளில் கோயிலுக்குச் சென்று தரிசனம் முடித்து திரும்பினேன். சுவாமி பிரசாதத்தையும்,வாங்க மறுத்த அவனுக்கு
வற்புறுத்தி அன்பளிப்பாக பணமும் கொடுத்துவிட்டு ஊர் திரும்பினேன்.
இருப்பிட வரைபடம்
|